முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருக்கும் நெல்சன் திலீப்குமாரின் twitter பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

jailer twitter review

அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை திரையரங்குகளில் உற்சாகத்துடன் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் கண்டு களித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் நெல்சனை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜெயிலர் திரைப்படம் பார்த்ததற்கு முதலமைச்சருக்கு மிகவும் நன்றி. உங்களின் ஊக்கமும், பாராட்டுகளுக்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வைரலாகி வருகிறது.