Web Ad 2

ரஜினி-கமல்-விஜய் சேதுபதி மூவரும் இணையும் ஒரு கதை: மிஷ்கின் தகவல்..

Web Ads

ரஜினி-கமல் இணைந்து நடிக்கப்போகும் படத்தின் இயக்குநர் நெல்சன் தான் என கோலிவுட் கணித்து வருகிறது. ஆனால், இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில், தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். மேலும், இவரது இயக்கத்தில் ‘பிசாசு-2’ என்ற படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது.

இச்சூழலில் மிஷ்கின் தெரிவிக்கையில், ‘ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என சொல்லப்படுகிறது. அவர்களுக்காக மூன்று நாட்களில் ஒரு கதையை உருவாக்கினேன். கதையை என் உதவி இயக்குநர்களிடம் சொன்னபோது அவர்களுக்கு கதை ரொம்ப பிடித்துவிட்டது. இதை, ரஜினி மற்றும் கமல் அவர்களிடம் சொல்லுங்க என சொன்னார்கள்.

ஆனால், நான் வேண்டாம் என்றேன். இது உங்களுக்காக தான் சொன்னேன் என்றேன். மேலும், இக்கதையை நான் தயாரிப்பாளர் தாணு சாரிடமும் சொன்னேன். அவருக்கும் கதை ரொம்ப பிடித்துவிட்டது.

இந்த கதையை நான் ரஜினி-கமலை வைத்து படமெடுக்க வேண்டும் என யோசிக்கவில்லை. பொதுவாகவே, எனக்கு கதை சொல்வது பிடிக்கும். அதனால், இந்த கதையை தயார் செய்தேன். இது ஒரு வரலாற்றுத் திரைப்படம், இளையராஜா தான் இசை. ஒருபக்கம் ரஜினி மறுபக்கம் கமல் மற்றும் விஜய் சேதுபதி, இளையராஜா இசை என நல்ல காம்போவாக இருக்கும்’ என்றார்.

தற்போது ரஜினியும் கமலும் தங்களுக்கான கதையை தேர்வு செய்து வருகின்றனர். அவ்வகையில், நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் அதனை கமலிடம் ரஜினி பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. அறிவிப்பு வரட்டும் பார்க்கலாம்.

director mysskin created a story for rajini and kamal movie
director mysskin created a story for rajini and kamal movie