ஜிவி பிரகாஷை நடிகராக்கிய பிரபல இளம் தமிழ் இயக்குனர் மரணம் அடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் மணி நாகராஜ்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும் சிறு பட்ஜெட் படம் ஒன்றை இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில் இளம் வயது ஆன இயக்குனர் மணிராஹராஜ் திடீரென மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அதிர்ச்சி அனைத்து பிரபலங்கள் அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய திடீர் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.