விஜய்க்கு கதையை கூறினேன்.. ஆனால்? மகிழ்திருமேனி ஓபன் டாக்!!
விஜய்க்கு கதை கூறியுள்ளதாக மகிழ்திருமேனி கூறியுள்ளார்.

director magizhthirumeni latest speech viral
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மகிழ்திருமேனி. இவர் அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜய்க்கு கதை சொன்ன விஷயத்தை கூறியுள்ளார். அதாவது விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று பல இயக்குனர்களுக்கு ஆசை இருக்கும் அப்படி நானும் அவரை சந்தித்து கதையை கூறினேன்.
விஜய் சாரிடம் சொன்ன மூன்று கதையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த கதையை தேர்வு செய்வது என்று குழப்பத்தில் இருந்தார் நானே ஒரு கதையை தேர்வு செய்து சொன்னேன் அதற்கு அவர் ஓகே என்று தான் சொன்னார் ஆனால் அந்த நேரத்தில் வேறொரு படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் இடம் அட்வான்ஸ் வாங்கி விட்டேன். அதனால் நான் அந்தப் படத்திற்கு முன்னுரிமை கொடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director magizhthirumeni latest speech viral