YouTube video

Director Lokesh Kanagaraj Upcoming Fours Movies List

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர் கைது என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்து இருந்தார்.

கைதி படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதபதி ஆகியோரை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் – கலாய்த்த மாளவிகா மோகன்!ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போன இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் யாருடைய படங்களை இயக்குவார் என்பது குறித்த ஒரு லிஸ்ட் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கலாம்.இந்த படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய்யுடன் கூட்டணி அமைத்து விஜய்யின் 67ஆவது படமான தளபதி 67 படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

அதன் பின்னர் சூர்யாவுடன் இணைந்து ஏற்கனவே உருவாக இருந்து கைவிடப்பட்ட இரும்பு கை மாயாவி என்ற படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.மாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா?

இப்படங்களுக்கு பிறகு மீண்டும் கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு படங்களில் நீங்க எந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிட்டு இருக்கீங்க??

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.