விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக்கதை குறித்து இயக்குனர் வினோத் அப்டேட்
தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
விஜய் நடிக்கும் கடைசிப் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பர்ஸ்ட் & செகன்ட் லுக் வெளியிட்டுள்ளது.
ஜன திரளுக்கு முன்பாக விஜய் செல்ஃபி எடுப்பதாக இந்த ‘ஜன நாயகன்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காணப்படுகிறது.
படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு, பொங்கல் அல்லது கோடை விடுமுறையில் ‘ஜன நாயகன்’ படம் ரிலீஸாக உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் அரசியலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘பகவந்த் கேசரி’ படத்தை தழுவி, விஜய்க்கேற்ப மாற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் அரசியல் பேசும் படம்தான். அதை நிரூபிக்கும் வகையிலேயே தற்போது படத்தின் போஸ்டரும் அமைந்துள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தின் மேக்கிங் குறித்தும், படத்திற்காக விஜய் வைத்த அன்பான நிபந்தனைகள் குறித்தும் இயக்குநர் ஹெச்.வினோத் கூறுகையில்,
(ஜனநாயகன்)படம் 200 சதவிகிதம் விஜய்யின் படமாகவே அமையும். கமர்சியலாக அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை.
இந்தப் படத்தின் துவக்கத்திற்கு முன்னதாகவே, விஜய் தன்னிடம் தன் படத்தை அனைத்து வயதினரும் அனைத்து அரசியல் கட்சியினரும் பார்ப்பார்கள் என்றும், அதனால் யாரையும் தாக்கும் வகையில் இல்லாமல், லைட்டான விஷயங்களை வைத்து இந்தப் படத்தை கொடுக்க வேண்டும்’ என்று விஜய் சொல்லியிருக்கிறார். அதனால், அதற்கேற்ப திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்’ என உறுதிபட குறிப்பிட்டுள்ளார்.