இயக்குனர் கௌதம் மேனன் டங்கா மாரி பாடலுக்கு ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் மேனன். தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மும்பரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படும் நிலையில் பிரபல முன்னணி இசையமைப்பாளரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கௌதம் மேனன் ரசிகர்களுடன் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் பிரபல இசை கலைஞர்கள் சமீப காலமாக பல இடங்களில் இசை கச்சேரிகளை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளராக திகழும் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கச்சேரி நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்த இயக்குனர் கௌதம் மேனன் அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகி வரவேற்பை பெற்றிருந்த டங்கா மாறி பாடல் ஒலிக்கும் போது அப்பாடலுக்கு ரசிகர்களுடன் இணைந்து செம்மையாக குத்தாட்டம் போட்டுள்ளார். அதன் வீடியோ இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.