துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் கொடுத்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதன் வரவேற்பை தொடர்ந்து அவர் தற்போது விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகியாக நடிகை ரீத்துவர்மா நடிக்க இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. சில காரணங்களால் தள்ளி போனா இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

இதனை அடுத்து இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் நடத்திய கான்சர்டில் இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்திருக்கும் அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், இப்படத்திற்காக 3 பாடல்களை ஹாரிஷ் ஜெயராஜ் கம்போஸ் செய்துள்ளதாகவும், பாடல்களை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இதில் வாரணம் ஆயிரத்தில் இடம்பெற்று வரவேற்பை பெற்ற ‘அஞ்சல’ பாடல் போன்ற ஒரு பாடலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். தற்போது இந்த தகவல் படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.