துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இணையும் படம் தொடங்குவது எப்போது என்பது தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டவர் மாரி செல்வராஜ்.
திரையரங்குகளில் வெற்றி நடை போட்டதை தொடர்ந்து நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பகத் பாஸிலின் நடிப்பை பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படியான நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள படம் எப்போது தொடங்கும் என தெரிய வந்துள்ளது. அதாவது என் மாத இறுதியில் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
கபடியை மையமாக கொண்டு உருவாக உள்ள இந்த படத்தை பா ரஞ்சித் அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.