அடுத்த ஆண்டு உலக கோப்பைக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி கடும் பயிற்சி எடுத்து வருகின்றது. இந்த நிலையில் அணியின் மாற்றங்களும் அமைகின்றது.

மாற்றத்தில் முக்கியமாக பலரால் பேசப்பட்டது ரோகித்தின் கேப்டன் பொறுப்பும் ஒன்று. மேலும் டெஸ்ட் போட்டிகளில் ராயுடு சேர்க்கப்படாததும் கவனிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்னும் சிலரால் பேசப்பட்டு வருவது தல தோனியை பற்றி தான். அவரின் பேட்டிங் முன்பை விட மிக மோசமாக இருப்பதாகவும் பேச்சு வர தொடங்கி உள்ளது.

அது போலவே தலையின் பேட்டிங் ரேட் குறைந்து உள்ளது. 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு தோனியின் பேட்டிங் மற்றும் ரன் ரேட் குறைந்து உள்ளது.

தலையின் ஸ்ட்ரைக் ரேட் 42 ஆனால் இப்பொது அது மிகவும் குறைந்து 28.13-ல் உள்ளது. இந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில் தல ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை.

இதற்க்கு காரணம் அவர் 5,7 ஆம் ஆளாக இறங்குவது கூட இருக்கலாம் என்று அவரின் ரசிகர்கள் தல தோனிக்கு ஆதரவு அளிக்கின்றன.

எதுவாக இருந்தபோதிலும் ரசிகர்கள் தல தோனியிடம் நல்ல ஆட்டத்தை எதிர்பார்ப்பதும், ஆதரவும் குறையாது.