Dhilluku Dhuddu 2 Review

Dhilluku Dhuddu 2 Review :  ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் தில்லுக்கு துட்டு 2.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுகம் நாயகியான ஸ்ரீதா சிவதாஸ் நடித்துள்ளார்.

மேலும் ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், சிவ ஷங்கர் மாஸ்டர், இயக்குனர் மாரி முத்து, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயப்ரகாஷ், பிபின், சி.எம் கார்த்தி, பிரசாந்த் ராஜ் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

கதைக்களம் :

ஊதாரி தனமாக தன்னுடைய மாமாவுடன் சேர்ந்து ஏரியாவையே அதகளம் செய்து வருகிறார் சந்தானம். இவரை ஒழித்து கட்டுவதற்காக அந்த பகுதி மக்கள் திட்டம் போட்டு கேரளாவில் மாந்திரீகம் தெரிந்த ஒருவரின் மகளின் மீது சந்தானத்திற்கு காதலை வரவைத்து விடுகின்றனர்.

நாயகியான ஸ்ரீதாவிடம் யார் காதலை சொன்னாலும் அவர்களை துர்சக்தி ஒன்று கொன்று விடும். சந்தானமும் காதலை சொல்ல பேயிடம் மாட்டி கொள்கிறார்.

பிறகு பேய்களுக்கும் சந்தானத்திற்கு இடையே என்னவெல்லாம் நடக்கிறது? ஏன் ஹீரோயினியுடம் காதலை சொன்னால் பேய் வருகிறது? பேய்களை அழித்து இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.

சந்தானம் :

சந்தானம் முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் தன்னுடைய காமெடி கலந்த நடிப்பை வாரி வழங்கியுள்ளார். சீனுக்கு சீன் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். மொட்டை ராஜேந்திரனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி பேய்களுடன் நடக்கும் சண்டைகள் சிரிப்புக்கு 100% கேரண்டி கொடுக்கின்றன.

ஸ்ரீதா சிவதாஸ் :

அறிமுக நாயகியாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களை கொள்ளையடித்துள்ளார் அம்மணி.

மொட்டை ராஜேந்திரன் :

மொட்டை ராஜேந்திரனின் காமெடியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. எதார்த்தமாக அவர் பேசும் டைலாக்குகள் ரசிகர்களை சிரிக்க வைத்து விடுகிறது.

இதர நடிகர் நடிகைகள் :

ராமர், தனசேகர் இடம் பெரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அவர்களது நடிப்பை அற்புதமாக கொடுத்துள்ளனர். ஊர்வசி, பிபின் சேர்ந்து செய்யும் காமெடிகளும் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளன.

தொழில்நுட்பம் :

இசை :

ஷபீரின் இசை இப்படத்திற்கு மேலும் ஒரு தூணாக அமைந்துள்ளது என்றே கூறலாம். பாடல்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

தீபக் குமார் பதி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் கை வண்ணம் பாராட்டும் படியாகவே அமைந்துள்ளது.

இயக்கம் :

ராம் பாலாவின் இயக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தை அழகாகவும் கச்சிதமாகவும் கொடுத்துள்ளார். ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் இப்படத்தை கொண்டு சென்றுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. சந்தானம், கருணாகரன் என அனைவரின் நடிப்பு
2. காமெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here