மாமன்னன் திரைப்படம் குறித்து தனுஷ் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் தற்போது பிஸியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து D50 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் தனுஷ் அதை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார்.

இது குறித்து ஏற்கனவே அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது மாறி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ஆம் தேதியான நாளை திரைக்கு வர இருக்கிறது. படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் மாமன்னன் படம் குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதில் அவர், “மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிகள் சரவெடியாக இருக்கும். ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.