Historical Film
Historical Film

Historical Film :

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் எனும் பிம்பத்தை உடைத்து புது நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானவர் தனுஷ்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,

அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

இவர் வழக்கத்துக்கு மாறாக தற்போது பல படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கும் அசுரன், துரை செந்தில்குமார் இயக்கும் படம், கார்த்திக் சுப்புராஜ் படம், அவரே இயக்கி நடிக்கும் படம், மாரி செல்வராஜ் படம் என இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

இந்த நிலையில் தற்போது ஆனந்த விகடனில் வந்த வேள்பாரி பிரம்மாண்ட தொடரை தனுஷ் படமாக எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரித்திரக் கால கதையான இதை பாகுபலி பாணியில் பிரம்மாண்டமாக எடுக்க தனுஷ் திட்டமிட்டுள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.