Dhanush sing Valimai Song
Dhanush sing Valimai Song

வலிமை படத்தில் தல அஜித்தோடு தனுஷ் கைகோர்த்து இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

Dhanush sing Valimai Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில் இப்படம் உருவாக போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் அஜித்திற்கு யுவன் போட்ட மியூசிக் பட்டையைக் கிளப்பியது இதனால் இந்த படத்தின் மீதான இசையும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதுவுமே செட் ஆகல.. வலிமை கதை மாற்றத்தால் உச்சகட்ட டென்ஷனில் வினோத்?? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

மேலும் இப்படத்தில் காதல் பாடல், குத்து பாட்டு, ரொமான்டிக் பாட்டு என அனைத்தும் கலந்த வெரைட்டியாக இந்த ஆல்பம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது யுவனால் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஒருவேளை தனுஷ் மட்டும் இப்படத்தில் பாடி இருந்தால் அது நிச்சயம் செம ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.