திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி பெற்றதால் தனுஷ் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் செல்வராகவனின் தம்பியாக திரையில் அறிமுகமான இவர் பல கேலி கிண்டல்களுக்குப் பிறகு இன்று சாதனை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹிட் கொடுத்த திருச்சிற்றம்பலம்... சம்பளத்தை உயர்த்திய தனுஷ் - ஒரு படத்துக்கு எவ்வளவு தெரியுமா??

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனுஷ் படம் பதித்து தனது வெற்றியை நிலை நாட்டியுள்ளார். மேலும் இவரது நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் எதிர்பாராத அளவு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியின் காரணமாக இதுவரை 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த தனுஷ் தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவரை வைத்து படம் பண்ணும் முயற்சி செய்து வரும் தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஹிட் கொடுத்த திருச்சிற்றம்பலம்... சம்பளத்தை உயர்த்திய தனுஷ் - ஒரு படத்துக்கு எவ்வளவு தெரியுமா??

தனுஷ் சம்பளத்தை உயர்த்திய விஷயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.