மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீஸ் என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தனுஷ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Dhanush Reaction on Master Release in Theatres : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், ஸ்ரீநாத், வர்ஷா பொல்லம்மா, தீனா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து படக்குழு மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் தான் OTT-ல் ரிலீசாகும் என அறிவித்தனர்.
இதனையடுத்து தற்போது தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பிற்கு செம மகிழ்ச்சி என்பது போல பதிவிட்டுள்ளார்.
தனுஷின் இந்த பதிவு பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.