விஜயை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் D50 மற்றும் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இன்று நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக்கு சுல்தான் படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா இறுதியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடி சேர்ப்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.