தான் இயக்கிய திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷே வரவில்லை; காரணம்.?
தான் இயக்கிய திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மீது தனுஷுக்கு என்ன கோபம் என நிகழ்ச்சிக்கு வந்தவர்களே கேட்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு உண்டர்பார்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரேயாஸ் சரியான பதிலை அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு போட்டியாக இட்லி கடை படம் வராது. ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போகும் என சில ரூமர்களை கிளப்பி வரும் நிலையில், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருப்பதால் தான் இங்கே வர முடியவில்லை.
ஏப்ரல் 10-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால், ரொம்பவே கடுமையாக தனுஷ் உழைத்து வருகிறார் என ஸ்ரேயாஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனுஷின் இட்லி கடை படத்துடன் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானால், அந்த படத்தின் வசூலும் பாதிக்கும் என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழ் புத்தாண்டை டார்கெட் செய்து இரண்டு படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் நன்றாக வந்திருப்பதாக எஸ்.ஜே. சூர்யா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் படத்தை பாராட்டி பேசியுள்ளனர். காதலர் தினத்துக்கு வரவேண்டிய அந்த படம் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் காரணமாக பிப்ரவரி 21-ம் தேதி தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.