நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகை பிரமிக்க வைக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து நடிகர் தனுஷ் ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.

கலர் எல்லோ ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு “தேரே இஸ்க் மேன்” (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

இது குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ராஞ்சனாவின் பத்து வருடங்கள், சில திரைப்படங்கள் நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றிவிடும். ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தற்போது ஒரு தசாப்தத்திற்கு பிறகு ராஞ்சனாவின் உலகில் இருந்து ஒரு கதை, “தேரே இஸ்க் மேன்” (Tere Ishk Mein). எதுமாதிரியான பயணம் எனக்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு சாகசமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் ” என்று குறிப்பிட்டு அப்படம் தொடர்பான வீடியோ ஒன்றுடன் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.