தனுஷ் தன்னுடைய அடுத்த பட ஆசையை பற்றி விருது விழா ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாகி அசுரத்தனமான வெற்றியடைந்த திரைப்படம் அசுரன்.
வெற்றிமாறன் இயக்கிய இந்த படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என அத்தனை விருதுகளையும் அள்ளி வருகிறது.
சமீபத்தில் கூட விருது விழா ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய தனுஷிடம் தொகுப்பாளர்கள் அடுத்தது அசுரன் 2 வருமா என கேட்டதற்கு முதலில் புதுப்பேட்டை 2-க்கு ஒரு வழி பண்ணுவோம். அப்புறம் அசுரன் 2 ரெடி பண்ணுவோம் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக போவது புதுப்பேட்டை 2 தான் என்பது ஓரளர்விற்கு உறுதியாகியுள்ளது, இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
மேலும் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடிக்கிறார், இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என பல படங்கள் வரிசை கட்டி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.