தனுஷின் நியூ லுக் ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து வேண்டுதல் செலுத்தி வந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர் நடிக்க இருக்கும் அவரது ஐம்பதாவது திரைப்படமான டி-50 என்னும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அவரே இயக்கி நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது நியூ லுக்கில் இருக்கும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களால் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.