Dhanush Movie
Dhanush Movie

Dhanush Movie : ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,

அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

வெற்றிமாறனுக்காக தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான் – ஸ்பெஷல் அசுரன் அப்டேட்!

2012-ம் ஆண்டு வுன்டர்பார் பிலிம்ஸ் எனும் பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய தனுஷ் அதன்மூலம் பத்துக்கும் மேற்பட்ட படங்களை இதுவரை தயாரித்துள்ளார்.

எதிர்நீச்சல், காக்கி சட்டை, நானும் ரௌடி தான் போன்ற படங்கள் தரமான எண்டர்டையினராக ரசிகர்களை மகிழ்வித்த நிலையில காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு போன்ற படங்கள் மாற்று சினிமாவாக வெளிவந்து விருதுகளை வாரி குவித்தது.

இந்த நிறுவனத்தை வினோத் என்பவர்தான் கவனித்து வந்தார். ஆனால் கணக்கு வழக்குகளில் அவர் குளறுபடி செய்ததால் தற்போது அவரை தனுஷ் நீக்கிவிட்டாராம்.

மேலும் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தையே அவர் கைவிட்டுவிட்டாராம்.