நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும் அதில் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.