மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிகர் தனுஷ் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Dhanush in Second Telungu Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இன்று நம்பிக்கை நாயகனாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை வைத்து திரையுலகில் தடம் பதித்து தனுஷ் நடித்து வருகிறார். மேலும் இவர் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். சேகர் கம்முலா தேசிய விருது பெற்ற இயக்குனர் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்து வருகிறது.

மேலும் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய தனுஷ் ஐதராபாத் சென்று சேகர் கம்முலா மற்றும் அப்படத்தின் தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்தார். அந்த சமயத்தில் சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நாக வம்சி தனுஷை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் ஆடுகையில் 2 வீராங்கனைகள் மயக்கம் : மற்றவர்கள் அதிர்ச்சி..பரபரப்பு..

இவரது தயாரிப்பில் நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங்தே போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம Treat! – Suriya 40 Massive Update | Latest Cinema News | HD

தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் கமிட்டாகியதை பார்த்த ரசிகர்கள் ஒரேயடியாக டோலிவுட் பக்கம் தாவுகிறாரா தனுஷ்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.