திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரத்தை குறித்து தனுஷ் வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush has release the character of Tiruchitrambalam:

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் அவர்கள் நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற மூன்று படங்களும் ரசிகர்களிடையே தனுஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போவதாக படக்குழு தெரிவித்திருந்தனர். அதன்படி  கதாபாத்திரங்களின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அனுஷா என்ற கதாபாத்திரத்தில் ராஷி கண்ணாவும், ரஞ்சனியாக பிரியா பவானி ஷங்கரும் மற்றும் ஷோபனாவாக நித்யா மேனனும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனுஷ்  அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் இடையே அச்சகத்தை ஏற்படுத்தியதோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.