முதல் தமிழ் நடிகர் என்ற பதிவுடன் நியூயார்க்கில் உள்ள டைம்போட்டில் ஒளிபரப்பாகும் விஜய்யின் வீடியோவிற்கு மறுப்பு தெரிவிக்கும் தனுஷ் ரசிகர்களின் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் அசைக்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தனுஷ். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர்கள் தமிழ் சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களான லியோ மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் வரும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்து அவ்வப்போது இணையதளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயர் பில் போர்டில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அதனை பதிவிட்ட விஜய் ரசிகர்கள் முதல் தமிழ் நடிகர் என்ற பதிவுடன் அந்த வீடியோவை வைரலாக்கி வரும் நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து தனுஷ் ரசிகர்கள் அவரது நடிப்பில் வெளியான அட்ரங்கீரே, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களின் போஸ்டர்கள் அந்த பில் போர்டில் ஏற்கனவே ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்ததாக கூறி புகைப்படங்களை பதிவிட்டு தனுஷ் தான் நம்பர் ஒன் என்று குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர். தற்போது இந்த இரண்டு பதிவுகளும் இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.