தனுஷ் படத்தில் நடிக்க இருக்கும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் அவரே இயக்கிய நடிக்க இருக்கும் “டி 50” படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பும் போஸ்டருடன் வெளியாகி இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே சில தகவல்களும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக இந்த படத்தில் அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனிகா சுரேந்திரன் தற்போது மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருவதால் இப்படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதோடு இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.