Web Ads

தனுஷின் மேலாளர் விவகாரம்: நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்..

Web Ad 2

நடிகை ருக்மணி வசந்த், தனது பெயரில் ஃபேக் ஐடி பயன்பாடு உள்ளதாக சைபர் கிரைமில் புகார் செய்தார். இது குறித்த விசாரணையில் இளம்பெண் ஒருவர் கண்டறியப்பட்டார். இதுபோல அனுபமா பரமேஸ்வரன், தனது பெயரில் போலியாக இன்ஸ்டா கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஷ்ரேயாஸ் குறித்து, மான்யா ஆனந்த் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது. இது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக மான்யா ஆனந்த் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மான்யா ஆனந்த், ‘வணக்கம், இது சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள்.

அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். மேலும், அந்த நபரிடமே, அவருடைய எண்ணை தனுஷ் சார் குழுவினருடன் பகிர்ந்து சரிபார்ப்பேன் என்றும் சொன்னேன் எனவும் கூறியிருப்பேன். முன்முடிவுகளுக்கு வரும் முன்னர் முழுமையான வீடியோவைப் பார்க்கவும். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

dhanush controversy actress manya anand explain
dhanush controversy actress manya anand explain