சூரரைப் போற்று பட குழு தேசிய விருது பெற்றதற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோவாக இருப்பவர் தான் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யாவின் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு சூரரை போற்று திரைப்படம் வெளியானது. இப்படத்தை சுதா கொங்குரா இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

சூரரைப் போற்ற பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ் - வைரலாகும் பதிவு.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. சுவாரசியம் குறையாமல் நேர்த்தியான திரைக்கதையுடன், நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியிருந்தேன் இந்த திரைப்படம் தற்போது 68 வது தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது.

சூரரைப் போற்ற பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ் - வைரலாகும் பதிவு.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் “தேசிய விருது வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக சூர்யாவுக்கும், எனது நல்ல நண்பர் ஜிவி பிரகாஷுக்கும் வாழ்த்துகள். இந்த நாள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நாள். பெருமையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.