பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தனலட்சுமி வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சிங்சின் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் டிக் டாக் பிரபலம் தனலட்சுமி வெளியேற்றப்படுகிறார்.

76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து லேபர் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில் மொத்தமாக 11 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

சண்டையும் சச்சரவுமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற தனலட்சுமிக்கு 11 லட்சம் சம்பளம் தருவது தப்பே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.