Delhi Capitals :
Delhi Capitals :

Delhi Capitals : ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இதில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ டென்லி, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

முதல் ஓவரிலேயே ஜோ டென்லியை அவுட்டாக்கி அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார் இஷாந்த் சர்மா.

அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா கில்லுடன் நிதானமாக ஆடினார். உத்தப்பா 28 ரன்னிலும், நிதிஷ் ரானா 11 ரன்னிலும் அவுட்டாகினர்.

சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக இறங்கிய ஆண்ட்ரு ரசல் தனது அதிரடியை தொடர்ந்தார். ரசல் 21 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 45 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி சார்பில் கிறிஸ் மாரிஸ், ரபடா, கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 14 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னிலும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்கள்.

அப்போது அணியின் ஸ்கோர் 5.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்னாக இருந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பான்ட், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுடன் இணைந்தார்.

இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி எடுத்து சென்றனர். ஷிகர் தவான் 32 பந்துகளில் அரைசதத்தை அடித்தார்.

இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் 17.1 ஓவர்களில் 162 ரன்னாக உயர்ந்த நிலையில் ரிஷாப் பான்ட் 46 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து காலின் இங்ராம் களம் இறங்கினார். 18.5 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷிகர் தவான் 63 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 97 ரன்னும், காலின் இங்ராம் 6 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஐ.பி.எல். போட்டியில் ஷிகர் தவான் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அவர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

7-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இந்த சீசனில் டெல்லி அணி, 2-வது முறையாக கொல்கத்தாவை வீழ்த்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.