
இரண்டாவது கல்யாணம் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார் டிடி திவ்யதர்ஷினி.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் அதன் பிறகு பவர் பாண்டி உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தன்னுடைய பள்ளி பருவ நம்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட டிடி ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது தனியாக வாழ்ந்து வரும் இவருக்கு இரண்டாவது திருமணம் எனவும் மாப்பிள்ளை இவர்தான் அவர்தான் எனவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.
இது குறித்து பேட்டி ஒன்றின் விளக்கம் அளித்துள்ளார் டிடி. அத்தனை பற்றி பரவும் வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பத்து வருடத்திற்கு முன்பு திருமணம் பற்றி இருந்த கருத்து இன்று மாறி உள்ளது.
எல்லோருக்கும் திருமணம் என்பது அத்தியாவசியமான ஒன்று கிடையாது. எனக்கு இரண்டாவது திருமணம் நடந்தால் அது எல்லோருக்கும் தெரியதான் போகிறது. நான் யார் என்பது எனக்கு தெரியும் எனக்கு யாரும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளார்.
