டிடி ரிட்டன்ஸ் படத்தின் ott ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் பிரேம் ஆனந்த் கூட்டணியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் “டிடி ரிட்டன்ஸ்”. தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகமாக வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரவேற்பை பெற்றிருந்தது.

இதில், ரெடின் கிங்ஸ்லீ, மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீபா ஆகியோரின் நடிப்பு காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சிரிப்பலையை உருவாக்கி இருப்பதாக பலரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற செப்.1 ஆம் தேதி வெளியாகும் என சிறப்பு வீடியோவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.