டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் பிரேம் ஆனந்த் கூட்டணியில் கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் “டிடி ரிட்டன்ஸ்”. தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகமாக வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

ரெடின் கிங்ஸ்லீ, மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீபா ஆகியோரின் நடிப்பு காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சிரிப்பலையை உருவாக்கி வருவதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டியுள்ளனர். அதன் புகைப்படத்தை நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.