வீல் சேரில் தொகுப்பாளினி டிடி யை அமரவைத்து தள்ளிச் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

DD in Wheel Chair : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

பல திரையுலக பிரபலங்களை காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பேட்டி எடுத்து ரசிகர்களிடையே பிரபலமான இவர் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார்.

இப்படியான நிலையில் டிடி வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தனக்கு கீல்வாதம் இருப்பதால் ரொம்ப தூரம் நடந்து செல்ல முடியாது என்ற காரணத்தினால் வீல் சேரில் அமர்ந்து செல்வதாக அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.