Darbar Shooting Schedule : Rajinikanth | Nayanthara | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Tamil Cinema News | AR.Murugadoss

Darbar Shooting Schedule :

ரஜினியால் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தள்ளி போக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து நாளை முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் தொடங்க இருந்தன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்வதை உறுதி செய்திருந்தார்.

இதனால் நாளை தொடங்க இருந்த படப்பிடிப்பு தள்ளி போகலாம், அல்லது ரஜினியை தவிர்த்து மற்ற நடிகர்களின் பகுதிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் எதையும் அறிவிக்கவில்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.