Darbar First Look

Darbar First Look : தர்பார் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் காப்பி தான் எனவும் அதன் ஒரிஜினல் லுக் போஸ்டர் ஒன்றும் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.. மேலும் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இணையத்தை கலக்கும் தளபதி 63 பர்ஸ்ட் லுக் – ஆனால்?

இன்று காலை 8.30 மணிக்கு தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாக தொடங்கி இருந்தது.

ஆனால் தற்போது நெட்டிசன்கள் பலரும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரும் காபி தான். இதன் ஒரிஜினல் போஸ்டர் அர்னால்ட் நடித்த ‘கில்லிங் கந்த்தார்’ படத்தின் போஸ்டர் தான் என அந்த படத்தின் போஸ்டருடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்

முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் கதையே திருட்டு தான் என சர்ச்சைகள் எழுந்து இறுதியில் அது உண்மை தான் தகவல்கள் வெளியானதும் அந்த எழுத்தாளரின் பெயர் படத்திலும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Original First Look

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.