Ponniyin Selvan :
Ponniyin Selvan :

Ponniyin Selvan : தமிழ் சினிமாவை பொறுத்தவரை இயக்குநர்களின் காலம் என்பது மிகவும் குறைவாகதான் பார்க்கப்படும்.

மகத்தான பல படங்களை கொடுத்த இயக்குநர்கள் கூட ஒரு கட்டத்தில் அவுட் டேட் ஆகி படம் எடுப்பதை கைவிட்டுவிடுவார்கள்.

ஆனால் 80-களில் அறிமுகமான காலத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவே வலம் வருகிறார் மணிரத்னம்.

செக்கச்சிவந்த வானம் கொடுத்த உற்சாகத்தில் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க மணிரத்னம் தயாராகி வருகிறார்.

கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என இந்திய அளவில் பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

இத்தோடு இப்படத்திற்கு நிறைய அரங்க வேலைகள் இருப்பதால் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 800 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. மொத்தம் இரண்டு பாகத்துக்கும் சேர்த்துத்தான் இந்த தொகையாம்.

வழக்கமாக தன் படங்களை தானே தயாரித்து பின்னர் அப்படத்தை வேறொரு நிறுவனத்திற்கு விற்பதுதான் மணிரத்னத்தின் ஸ்டைல்.

ஆனால் இந்தமுறை பட்ஜெட்டை கணக்கில் கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்கும் முழு பொறுப்பையும் லைக்காவிடமே மணிரத்னம் கொடுத்துவிட்டார்.