டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி லோடட் 2 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜீ தமிழ்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி-லோடட், அடுத்ததாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ள நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஒளிபரப்பாக உள்ளது என்பது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ மூலமாக உறுதியாகியுள்ளது. இந்த வீடியோவில் நடனமாடும் திறமை உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினால் அவர்களது நடன வீடியோவை 7305402949 என்ற வாட்சப் நம்பருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே போட்டியாளர்களாக பங்கேற்க விரும்புபவர்கள் 18-வயதை நிரம்பியவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, எங்களது பேவரைட் ஷோ டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு வெறித்தனமான வைட்டிங் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். கடந்த சீசனை ஆர் ஜே விஜய் தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சங்கீதா மற்றும் சினேகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.