புத்தம் புதிய காரை வாங்கியுள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுனிதா. வட மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டு வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தான் வாங்கிய புத்தம் புதிய காரின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த காரின் மதிப்பு கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சுனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.