குக் வித் கோமாளி புகழ் மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

CWC Pugazh Wife Baby Shower Function : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் புகழ்.

இவருக்கு கடந்த வருடம் நீண்ட நாள் காதலியுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். தனது திருமண நாளன்று மனைவியின் கர்ப்பம் குறித்து புகழ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில் தற்போது மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இவருடைய இந்த வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.