
குக் வித் கோமாளி அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மதியம் பிரபலமானவர் அஸ்வின்.

இதற்கு முன்னதாக பல்வேறு குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர் தற்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக வெளியான செம்பி திரைப்படத்தில் அஸ்வின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஸ்வினுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் பிரபல தயாரிப்பாளர் மகள் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
