COVID19 Update 23.06.20
COVID19 Update 23.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVOD19 Update 23.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 38 பேர் வெளி மாநிலங்கள் நாடுகளில் இருந்து வந்தவர்கள். சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்க எதிர்க்க எழுவேன்.. தளபதி விஜய்க்கு திரையுலக பிரபலங்களின் அசத்தலான பிறந்தநாள் வாழ்த்துகள் – யார் யார் என்னென்ன சொல்றாங்க பாருங்க!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 39 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,277 பேர் டிஸ்சார்ஜ் போனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது. இது நிம்மதியளிக்கும் ஒன்றாக உள்ளது.