COVID 19 Update 23.07.20
COVID 19 Update 23.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 23.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 6,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5210 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இன்று 88 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3232 ஆக உயர்வு.

தமிழக ஆளுநர் மாளிகையில் 147 பேருக்கு பரிசோதனை செய்ததில் 84 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரானாவால் உயிர் இழந்தோர் பட்டியலில் மேலும் 444 பேர் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறித்து எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் மறைக்க முடியாத அளவில் மரணங்கள் ஏற்பட்டதால் இதை வெளியே கூறிவிட்டார்கள் என ஆளும் அதிமுக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களை மறைத்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரானாவை குணப்படுத்த இந்திய நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவேக்சின் தடுப்பு ஊசிக்கான மனித சோதனை சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகள் மற்றும் மருமகனுக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.