மாமன்னன் ரத்னவேல் குறித்த புகைப்படத்தை பதிவிட்டு உடனே டெலீட் செய்துள்ளார் பஹத் பாசில்.
தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். வடிவேலு, பஹத் பாசில் என பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி டிரெண்ட்டிங்கில் சாதனை படைத்து வருகிறது. உதயநிதி, வடிவேலுவை காட்டிலும் பஹத் பாசில் நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் பஹத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் ரத்னவேல் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பதிவிட ரசிகர்கள் பலரும் சாதி ரீதியாக கமெண்ட்டுகளை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
இதனால் பஹத் பாசில் கொஞ்ச நேரத்தில் அந்த புகைப்படத்தை டெலீட் செய்துள்ளார்.