
கண்ணீர் மேடையாக மாறி உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் ஞாயிறு மதியம் 3 மணி முதல் தொடர்ந்து 5 மணி நேரம் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி குறித்த முதல் ப்ரோமோ வீடியோவில் சிவாங்கி மோனிஷா உட்பட எல்லோரும் கண்ணீர் விட்டு எமோஷன் ஆக பேசியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தாமு அவர்கள் போற இடம் எல்லாம் என்னை எல்லாரும் அப்பா அப்பா என்று கூப்பிடுகிறார்கள், அதற்கு காரணம் இந்த ஷோ தான் என்று சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களையும் எமோஷனாக்கி உள்ளது.