பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி தான் சர்வைவர். ‌‌

Contestants of Survivor Show : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்ட பொருட்செலவில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு கடந்த வருடம் இறுதியில் வெளியானது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடிகர் அர்ஜுன் அல்லது சிம்பு தொகுத்து வழங்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு : தமிழக அரசு

பிரமாண்டமாக ஒளிபரப்பாக போகும் சர்வைவர் - போட்டியாளராக பங்கேற்க போவது யார் யார்? லீக்கான லிஸ்ட்.!!

மேலும் இது போட்டியாளராக அணிகா சுரேந்தர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக ஏற்று தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் போட்டியாளர்களாக பேர் பங்கேற்பார்கள் என்பது குறித்த விவரங்கள் கசிந்துள்ளன.

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற விஜே பார்வதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்ற விஜயலட்சுமியிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மேலும் விக்ராந்த், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர், நடிகர் நந்தா உள்ளிட்டவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.

Valimai படத்தில் Ajith-தின் தங்கையாக நடித்துள்ளவர் இவர் தானா! – அவரே வெளியிட்ட பதிவு