
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையின் ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி இந்த வழக்கு தொடர்ந்தார். அதில் கிட்டத்தட்ட 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாடியுள்ளார்.
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை தான் விசாரணை நடத்தி வந்தது. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை முதல்வருக்கு கீழ் செயல்பட கூடிய ஒரு அமைப்பு, ஆகையால் இந்த வழக்கில் எந்த ஒரு பெரிய விசாரணையும் ஏற்படாமல், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
எனவே சிறப்பு புலனாய்வு அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சென்னை ஹைகோர்ட், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உள்ள வழக்கை சிபிஐ – க்கு மாற்றி அதிரடி தீர்ப்பை வழங்கியது.