‘அமரன்’ திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து: என்ன தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான நடிப்பிலிருந்து வித்தியாசப்பட்டு, சீரியஸான புதிய பரிமாணத்தில் இன்று வெளியாகி இருக்கிறது அமரன் திரைப்படம். இப்படக்குழுவினருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை கண்டு களித்தார். இது குறித்து வெளியான தகவல்கள் பார்ப்போம்.

ஆம்..,’அமரன்’ படத்தை ஸ்பெஷல் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்திற்கும், படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்த படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

அமரன் படம் முழுக்க முழுக்க இராணுவ வீரரின் படம். சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவான அமரன், தமிழ் உள்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இன்று திரைக்கு வந்துள்ளது.

தமிழுக்கு முன்னதாக மற்ற மொழிகளில் இன்று அதிகாலையே அமரன் வெளியிடப்பட்டுள்ளது. அமரன் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், விறுவிறுப்பாகவும் ஆக்‌ஷனுக்கு பஞ்சமில்லாமலும் சொல்ல வந்த கதையை ரசிகர்களுக்கு தெளிவாகவும், விளக்கமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

இதுவரையில், யாருமே எதிர்மறையாக விமர்சனம் கொடுக்கவில்லை. அந்தளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்கள் பெரும்பாலும், காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாகவோ அல்லது முழுக்க முழுக்க காமெடி படமாகவோ இருந்திருக்கும்.

ஆனால், அமரன் ஒரு எதார்த்தமான உண்மையில் வாழ்ந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த நம் இராணுவ வீரரின் கதையை மையப்படுத்திய படம்.

தமிழ்நாட்டில் தாம்பரத்தில் பிறந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை படம் தான் அமரன். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அவரை போற்றும் வகையில், படத்தின் தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் இந்தப் படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

நண்பர் கலைஞானி கமல் ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன்.

புத்தகங்களைப் போல் – திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,

மேஜர் முகுந்த் வரதராஜன் – திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் – நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் பலரும் படம் பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நாமும் தெரிப்போம் அமரன் படக்குழுவினருக்கு ‘ பிக் சல்யூட்..!

cm mk stalin congratulated the movie team after watching amaran movie
cm mk stalin congratulated the movie team after watching amaran movie