CM EPS Meet With Medical Team

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி மிகவும் ஆபத்திற்குரிய வைரஸாக பரவி வருவதால் இந்த வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க மருத்துவக் குழுவுடன் ஆலோசனை ஈடுபட உள்ளார் தமிழக முதல்வர்.

CM EPS Meet With Medical Team : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம், ஆறாயிரம் என பரவி வந்த இந்த வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் குறைவான பாசிட்டிவ் கேஸ்களே கண்டறியப்பட்டு வருகின்றன.

இப்படியான நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த கொரானா வைரஸ் தொற்று உருமாறி வேறொரு விதமாக மிகவும் ஆபத்திற்குரிய ஒன்றாக அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால் லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் விமானங்களுக்கு இந்திய அரசு டிசம்பர் இறுதி வரை தடை விதித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் இந்த புதிய கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தப் புதிய கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க என்ன செய்யலாம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என மருத்துவக் குழுவுடன் வரும் டிசம்பர் 28ஆம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தெரியவரும்.